ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் |
கொரட்டல்ல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால், ராம்சரண், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்து வரும் படம் ஆச்சார்யா. இந்த படத்தை வருகிற மே 13-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், ஆச்சார்யா ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் பாலகிருஷ்ணாவின் பிபி-3 என்ற படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் ஏப்ரல் 9-ந்தேதி வெளியாகும் பவன் கல்யாணின் வக்கீல் சாப், ஏப்ரல் 16-ந்தேதி வெளியாகவுள்ள நாகசைதன்யாவின் லவ் ஸ்டோரி போன்ற படங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே தேதியில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.