லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதை அடுத்து, படத்தின் போஸ்டர், டீசர் என ஒவ்வொன்றாக வெளியிட்டு பிரமோசனிலும் ஈடுபட்டுள்ளார் ராஜமவுலி.
அந்த வகையில் நேற்றைய தினம் ராம்சரணின் பிறந்தநாள் என்பதால் அவரது போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் ராஜமவுலி. அதில் ராமரை போன்று வில்லை வளைத்து அதிரடி போஸ் கொடுத்திருந்தார் ராம்சரண். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
அதையடுத்து, அல்லூரி சீதா ராமராஜாவாக தன்னை வெளிப்படுத்தும் அந்த புதிய போஸ்டர் தைரியம், மரியாதை மற்றும் நேர்மை இதையெல்லாம் வரையறுத்த மனிதன். அல்லூரிசீதா ராமராஜூவின் வேடத்தில் நடிப்பது எனது பாக்கியம் என்று ராம் சரண் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி, ராம்சரணின் தந்தையான சிரஞ்சீவி, அந்த போஸ்டருக்கு ஆச்சர்யப்படுத்தல் என்று ஒரே வார்த்தையில் டுவீட் செய்திருந்தார். அதோடு, இன்றைய தினம் சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து நடித்து வரும் ஆச்சார்யா படத்தின் ஒரு போஸ்டரும் ராம்சரணின் பிறந்த நாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.
துப்பாக்கியை வைத்துக்கொண்டு போராட்ட வீரர்கள் போல
சிரஞ்சீவியும் ராம்சரணும் நடந்துவரும் அந்த போஸ்டரை பார்க்கும்போதே, படம் குறித்த
ஆர்வத்தை தூண்டுகிறது. கொரட்டால சிவா இயக்கிவரும் இந்தப்படத்தை ராம்சரண் தானே தயாரித்துள்ளார்.
ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் தான் ராம்சரண் நடித்துள்ளார் என்றும் சொல்லப்பட்டாலும்,
படம் முழுதும் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் ராம்சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும்
நடித்துள்ளனர்.