ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுகுமார். அவர் கடைசியாக இயக்கிய ராம்சரண், சமந்தா நடித்த ரங்கஸ்தலம் பெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை இயக்கி வருகிறார்.
சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் சுகுமார் உப்பெனா படத்தை மற்றொரு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். சமீபத்தில் வெளிவந்த இப்படம் முந்தைய புதுமுகங்களின் சாதனைகளை முறியடித்து பெரும் வசூலைக் குவித்து வருகிறது.
இப்படத்திற்காக மொத்த முதலீட்டையும் மைத்ரி நிறுவனம்தான் செய்ததாம். படத்தின் தயாரிப்பு மேற்பார்வை, கிரியேட்டிவ் மேற்பார்வை ஆகிய பணிகளை சுகுமார் செய்தாராம். அதற்காக லாபத்தில் அவருக்கு 50 சதவீதம் என்பதுதான் ஒப்பதமாம். தற்போது படம் 50 கோடி லாபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, எந்த பண முதலீடும் இல்லாமல் அவர் 25 கோடி வரை சம்பாதிக்கப் போகிறார் என டோலிவுட்டில் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
ஆனால், படத்தின் உருவாக்கத்தில் அவருக்கிருக்கும் மிகப் பெரும் பங்குதான் இந்த அளவிற்கு வெற்றியைக் கொடுத்தது என்பதை மறந்து சிலர் பேசுகிறார்கள் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.