ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாகுபலி திரைப்படம் இயக்குனர் ராஜமவுலி படம் என்பதால் மட்டுமே பான் இந்திய திரைப்படம் என்கிற அளவில் ரிலீசானது. அதேசமயம் அதற்கு அடுத்ததாக வெளியான கேஜிஎப், புஷ்பா போன்ற திரைப்படங்கள் படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்தியே பான் இந்தியா ரிலீஸாக வெளியாகின. அப்படி வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா படத்தின் முதல் பாகமாக வெளியான புஷ்பா தி ரைஸ் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தையும் அதே அளவிற்கு வெற்றி பெற செய்யும் விதமாக, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து உருவாக்கி வருகிறார்கள் இயக்குனர் சுகுமாரும், அல்லு அர்ஜுனும்.. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில், கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனாவும் இணைந்திருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் சுகுமாரும் உப்பென்னா இயக்குனரும் இணைந்து திரைக்கதை பற்றி விவாதிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.