காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷயம்.. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 தயாராகி, வரும் பிப்-19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தான் பேசும் ஒரு வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்லால். கூடவே ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார் மோகன்லால். மேலும், “உங்கள் குடும்பத்தை காக்க நீங்கள் எந்த அளவுக்கு துணிவீர்கள்” என கேள்வியும் எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதுடன், “:நான் எப்போதுமே ஒரு படி முன்னாடியே செல்வேன்.. என்னுடைய அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என யாராவது யூகிக்க முடியுமா ?. உங்களுடைய தியரிகளை ஷேர் பண்ணுங்கள்” என்று ரசிகர்களுக்கு சவாலும் விடுத்துள்ளார்.