சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
எந்த மாநிலமாக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவது, குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது. குறிப்பாக ஆந்திர போக்குவரத்து போலீஸார் இதற்காக என்னவெல்லாமோ விழிப்புணர்வு விஷயங்களை அமல்படுத்தியும் ஹெல்மெட் அணிவதை பெரிய அளவில் செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் முன்னணி ஹீரோவான மகேஷ்பாபுவை வைத்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளனர்.
அதாவது பரத் ஆனே நேனு என்கிற படத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் முதல்வராக நடித்திருந்தார் மகேஷ்பாபு. அப்படிப்பட்டவர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தினால், வாகன ஓட்டிகள், குறிப்பாக அவரது ரசிகர்களாவது அதை பின்பற்றுவார்கள் என நினைத்தனர் போக்குவரத்து போலீஸார். அதன்படி மகேஷ்பாபு ஹெல்மெட் அணிந்தபடி வண்டி ஓட்டுவது போன்ற புகைப்படத்தை வைத்து ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.