ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கேரள மாநிலத்தில் கேஎஸ்ஆர்டிசி என்கிற பெயரில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நவீனமயமாக்கப்பட்ட சுமார் 100 பேருந்துகளுக்கு மேல் பயணிகளுக்காக விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மக்களிடம் கேரள அரசு பேருந்து போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கேரள அரசு போக்குவரத்து கழகம் 'ட்ரான்ஸ்போ 25' என்கிற புதிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இதில் ஓர்மை எக்ஸ்பிரஸ் (ஞாபக எக்ஸ்பிரஸ்) என்கிற பெயரில் ஒரு துணை பிரச்சாரத்தையும் துவங்கி வைத்துள்ளார் கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சரும் நடிகருமான கே.பி.கணேஷ் குமார்.
இதனை தொடர்ந்து மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த அரசு பேருந்து கண்காட்சியை பார்வையிட்டதுடன் அந்த பேருந்துகளில் ஏறி சுற்றி பார்த்து தங்களது இளமைக்கால அரசு பேருந்து அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். அப்போது மோகன்லால் கூறும்போது, “நான் கல்லூரியில் படிக்கும்போது எப்போதுமே கேரள அரசு பேருந்தில் பயணிப்பதை தான் அதிகம் விரும்புவேன்” என்று கூறினார்.
அப்போது உடன் இருந்த இயக்குனர் பிரியதர்ஷன், “அந்த காலகட்டத்தில் நாங்கள் இருவருமே ஒரே பேருந்தில் தான் இணைந்து பயணிப்போம். நான் செங்களூர் ஜங்ஷனில் ஏறுவேன். எதிர்கால சூப்பர் ஸ்டாரான மோகன்லால். பூஜப்புராவில் ஏறுவார். அவர் எம்ஜி காலேஜில் படித்தார். நான் அப்போது யுனிவர்சிட்டி காலேஜில் படித்தேன். பெரும்பாலும் நாங்கள் இருவரும் பஸ்ஸுக்குள் இருந்து பயணிப்பதை விட, படிக்கட்டில் நின்றுகொண்டு பயணித்தது தான் அதிகம்” என்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.