நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
கடந்த 1998ல் மலையாளத்தில் வெளியான படம் சம்மர் இன் பெத்லகேம். சுரேஷ்கோபி, ஜெயராம், மஞ்சு வாரியர் நடித்திருந்த இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கலகலப்பான ஒரு காதல் கதையாக உருவாகி இருந்த இந்த படத்தை சிபி மலயில் இயக்கியிருந்தார். பிரபல இயக்குனர் ரஞ்சித் கதை எழுதியிருந்தார். படத்தை கோக்கர் பிலிம்ஸ் சார்பாக சியாத் கோக்கர் என்பவர் தயாரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சிபி மலயில், கதாசிரியர் ரஞ்சித், தயாரிப்பாளர் சியாத் கோக்கர் மூவரும் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளார்கள்.
இதுகுறித்த ஒரு அறிவிப்பை '27 வருடங்களுக்கு பிறகு' என்கிற ஒரு புதிய போஸ்டருடன் வெளியேற்றி உள்ளார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சம்மர் இன் பெத்லகேம் படத்தின் தயாரிப்பாளர் சியாத் கோக்கர் பேசும்போது அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பேச்சு போய்க் கொண்டு இருக்கிறது என்று சொல்லி இருந்தார். ஒருவேளை அந்த இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாகத்தான் இது இருக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.