தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் 'கல்கி' திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'தி ராஜா சாப்' திரைப்படம் உருவாகியுள்ளது. ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் மாருதி இயக்கியுள்ளார். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேசமயம் ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் இது போன்ற திரைப்படங்களில் இருந்து எவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என அவ்வப்போது ஏதாவது சில விஷயங்களை நகைச்சுவையாக செய்வார்கள். அப்படித்தான் தற்போது ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த வீடியோவில் பிரபாஸ் நடித்த முந்தைய படம் ஒன்றில் அவர் ஹெல்மெட் போடாமல், அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்ற காட்சியை இடம்பெறச் செய்து, அதன் பிறகு ராஜா சாப் டீசரில், “ஹலோ பிரதர் கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க” என பிரபாஸ் கூறும் வசனத்தையும் சேர்த்துள்ளனர். அதேபோல அதற்கடுத்து பிரபாஸ் இன்னொரு படத்தில் வண்டியை மெதுவாக ஓட்டி நிறுத்திவிட்டு இறங்கும்போது தன் தலையில் அணிந்து இருந்த ஹெல்மட்டை கழட்டுவது போலவும் ஒரு காட்சியை இணைத்து, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என்கிற பிரசாரத்தை இதன் மூலம் அழகாக மேற்கொண்டுள்ளனர் ஹைதராபாத் போலீசார். இதற்கு ராஜா சாப் படத்தின் இயக்குனர் மாருதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.