ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த இந்த திரைப்படம் பின்னர் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கூட கவனம் ஈர்த்தது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படம் துவங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே படப்பிடிப்பில் விரும்பத்தகாத சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற நடித்து வந்த இரண்டு மலையாள துணை நடிகர்கள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர். குறிப்பாக கடந்த ஒரு வாரத்துக்குள்ளாகவே மலையாள நடிகர் ஒருவரின் மரணம் நிகழ்ந்த அதிர்வு அடங்குவதற்குள்ளாகவே தற்போது காந்தாரா 2 படப்பிடிப்பின் போது அவர்கள் பயன்படுத்திய படகு நீரில் மூழ்கியது என்றும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் அந்த படகு ஒரு கதாபாத்திரமாகவே இடம்பெறுகிறது என்றும் அதேசமயம் படப்பிடிப்பு உபகரணங்கள் சில தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி விபத்து எதுவும் நடக்கவில்லை என்று படத்தின் தயாரிப்பு நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “படக்குழுவினர் படகில் சென்றபோது விபத்து நடந்ததாக கூறுவதில் எந்த உண்மையையும் இல்லை. சொல்லப்போனால் விபத்தே நடக்கவில்லை. அங்கிருந்த ஒரு நீர்த்தேக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று அதிக காற்றின் காரணமாக தண்ணீரில் கவிழ்ந்தது. அந்த படகு கூட எங்களது படத்தில் இடம்பெறும் விதமாக இல்லை. நாங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது பின்னணியில் அந்த படகு இருந்தது. அவ்வளவுதான். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலிலும் உண்மை இல்லை. தொடர்ந்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.