'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீப காலமாகவே தமிழ் திரையுலகை போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பல வருடங்களுக்கு முன்பு நடித்து ஹிட்டான படங்கள் அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான எமதொங்கா திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் பார்க்க வந்த பல ரசிகர்கள் படம் பிடிக்காமல் இடைவேளையிலேயே எழுந்து சென்றதையும் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் அதேபோல மகேஷ்பாபு நடிப்பில் கடந்த 2010ல் வெளியான கலீஜா திரைப்படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப்படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த ரீ ரிலீஸில் படத்தில் சில முக்கியமான காட்சிகள் இடம் பெறவில்லை என்று ரசிகர்கள் பல திரையரங்குகளில் கூச்சல் போட்டு திரைப்படத்தை நிறுத்தினர். இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.
அதுமட்டுமல்ல படத்தில் மகேஷ்பாபு தனது கையில் பாம்பு ஒன்றை பிடித்தபடி வரும் காட்சி இருக்கிறது. நேற்று படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவரும் அதேபோல தனது கையில் பாம்புடன் வந்திருக்கிறார். பலரும் அதை பொம்மை பாம்பு என்று நினைத்து இருக்கின்றனர். ஆனால் அருகில் வந்த பிறகுதான் அது நிஜமான பாம்பு என தெரியவந்துள்ளது. அதன்பிறகு அந்த ரசிகரை திரையரங்கு நிர்வாகத்தினர் கட்டுப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். சிப்படி சில கலாட்டாக்கள் நடந்த நிலையில், நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு பிரஷாக கலீஜா திரையிடப்பட்டுள்ளது என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.