விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? |
தமிழில் காஞ்சனா, அரண்மனை, சிங்கம் உள்ளிட்ட சில படங்களே மூன்று பாகங்களுக்கு குறையாமல் தொடர்ந்து எடுக்கப்பட்டன. மற்ற சில படங்கள் எல்லாம் இரண்டாம் பாகத்தோடு நின்று விட்டன. அதேசமயம் மலையாளத்தில் மம்முட்டி நடித்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு படம் மட்டும்தான் இதுவரை 5 பாகங்களை தொட்டுள்ளது. மோகன்லாலின் திரிஷ்யம் படம் கூட இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்டு தற்போது மூன்றாவது பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2015ல் மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் வெளியான படம் தான் ஆடு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2017ல் எடுக்கப்பட்டு இரண்டாம் பாகமும் வெற்றியை பெற்றது. இந்த இரண்டு பாகங்களையும் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் என்பவர் இயக்கியிருந்தார். இவர் தான் அஞ்சாம் பாதிரா என்கிற சைக்கோ திரில்லர் வெற்றிப் படத்தை இயக்கியவர். இந்த நிலையில் 8 வருடங்கள் கழித்து ஆடு படத்தின் மூன்றாம் பாகம் தற்போது இதே கூட்டணியுடன் துவங்கியுள்ளது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மூன்றாம் பாகமாக எடுக்கப்படும் மலையாள படம் என்கிற பெயரையும் இந்த படம் பெற்றுள்ளது பெற்றுள்ளது.