சூர்யா மீது கோபத்தில் இருக்கிறாரா கவுதம் மேனன் | அமீர்கானின் 'சிதாரே ஜமீன் பர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | த்ரிஷாவின் இரண்டு ஆசைகள் | மீண்டும் குடும்பஸ்தன் கூட்டணி | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸாகும் மோகன்லாலின் 'சோட்டா மும்பை' | ரஜினியிடம் என்னை ஆர்யா மாட்டிவிட்டான் : சந்தானம் கலகல | வெள்ளிக்கிழமை நாயகன் ; நடிகர் பசில் ஜோசப்புக்கு பட்டம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | சூப்பர்மேன் கதையுடன் இயக்குனராக அறிமுகமாகும் உன்னி முகுந்தன் | இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா |
நடிகர் மோகன்லாலுக்கு கடந்தாண்டு வெளியான மலைக்கோட்டை வாலிபன், அவரே இயக்கிய நடித்த பரோஸ் இரண்டு படங்களும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை. என்றாலும் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான எம்புரான் மற்றும் தொடரும் என இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்து நூறு கோடி வசூலையும் கடந்துள்ளன எம்புரான் படம் சில சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் கூட 200 கோடி வசூலை கடந்தது. தற்போது தொடரும் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று குறைந்த நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என மோகன்லாலின் அனைத்திந்திய கேரளா ரசிகர்கள் மன்றம் முடிவு செய்தது. இதை மோகன்லாலிடம் கூற, அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் மோகன்லால் தற்போது நடித்து வரும் ஹிருதயபூர்வம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. அதனால் இந்த ஹோட்டலிலேயே ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தொடரும் வெற்றி விழா கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதில் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குனர் தருண் மூர்த்தி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட மோகன்லால், கேக் வெட்டி சிலருக்கு ஊட்டியும் விட்டார். படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி ஆசையாக கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் கன்னத்தில் அன்பு முத்தமும் இட்டு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் மோகன்லால்.