டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் | தமிழில் ஹீரோவான இலங்கை ராப் பாடகர் | இயக்குனரான ராகவ் ரங்கநாதன் | சத்தமின்றி வெளியான 'தண்டர்போல்ட்ஸ்' | குடும்ப ரகசியத்தை காக்கும் கவுண்டமணி | பிளாஷ்பேக்: மஞ்சுளாவுடன் நடிக்க 5 வருட ஒப்பந்தம் போட்ட எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: வேதாள உலகம்: முதல் பேண்டசி பிரமாண்டம் |
மலையாளத்தில் கடந்த வருடம் பிப்ரவரியில் மம்முட்டி நடிப்பில் பிரம்மயுகம் என்கிற திரைப்படமும் வெளியானது. பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழும் கதை, கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு, மாந்திரீக கதையம்சம், 80 வயதான மனிதராக மம்முட்டி என பல வித்தியாசமான அம்சங்களுடன் வெளியான இந்த படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தை ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கி இருந்தார். இதற்கு முன்னதாக அவர் ரெட் ரெய்ன், பூதக்காலம் ஆகிய படங்களை இயக்கியவர்.
தற்போது பிரம்மயுகம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகி விட்டார் ராகுல் சதாசிவன். இந்த படத்தின் கதாநாயகனாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்கிறார். வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. பிரம்மயுகம் படத்தை தயாரித்த நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இரண்டும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. பிரம்மயுகம் படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் தான் இந்த படத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.