''விவரிக்க வார்த்தையே இல்லை'': லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா நெகிழ்ச்சி | வல்லவன் ஒருவன், முள்ளும் மலரும், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' | 'காளிதாஸ்' 2ம் பாகம் தயாராகிறது |
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்புரான். ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது.. அரசியல் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முதல் பாகத்தில் இடம்பெற்ற பல நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் 179.52 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. அதாவது 3 மணி நேரத்திற்கு வெறும் எட்டு வினாடிகள் மட்டுமே குறைவு. இதேபோல லூசிபர் படம் வெளியான போதும் இரண்டு மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.