பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் மேக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இதற்கு அடுத்ததாக அவர் நடிப்பில் நீண்ட கால தயாரிப்பாக உருவாகி வரும் பில்லா ரங்கா பாஷா படம் வெளியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த படம் மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தேதி குறிப்பிடாமல் ஒரு புதிய அப்டேட் ஒன்றை கிச்சா சுதீப் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பிற்காக சந்தோஷப்பட வேண்டிய அவரது ரசிகர்கள் பெரும்பாலும் தொடர்ந்து அதிருப்தியையே வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காரணம் இந்த படம் 2019ல் அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்டது. அதன் பிறகு துவங்கப்பட்ட பயில்வான், கோட்டி கோபால் 3, விக்ராந்த் ரோணா, கடைசியாக துவங்கப்பட்ட மேக்ஸ் திரைப்படம் வரை அடுத்தடுத்து படங்கள் வெளியாகி விட்டாலும் பில்லா ரங்கா பாஷா படம் மட்டும் அப்படியே கிடப்பில் இருந்தது. இதற்கிடையே இந்த படம் கடந்த வருடம் டிசம்பரில் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன் பிறகு இந்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் என்று சொல்லப்பட்ட நிலையில் அதுவும் தள்ளிப்போய் தான் தற்போது மார்ச் இரண்டாவது வாரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகூட ரிலீஸ் தேதியை சொல்லாமல் அறிவித்திருப்பதால் இதிலும் மாற்றம் வரலாம் என்று கிச்சா சுதீப்பின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அது மட்டுமல்ல சுதீப் சிசிஎல் போட்டிகள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி அதன் புரமோசன்களில் கலந்து கொள்வதையும் அதன் அறிவிப்புகளை வெளியிடுவதிலும் தான் ஆர்வம் காட்டி வருகிறாரே தவிர பில்லா ரங்கா பாஷா படத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால்தான் இத்தனை வருடங்கள் தாமதம் என்றும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த படத்தின் டைட்டில் ரஜினிகாந்த் நடித்த மூன்று படங்களின் டைட்டிலை ஒன்றாக இணைத்து வைத்து உருவாகி இருப்பதால் அதற்காகவே கூடுதல் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது என்பதும் உண்மை.