'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
இன்றைய தேதியில் மலையாள திரையுலகில் அதிக படங்களில் நடித்த வருவது யார் என்றால் சந்தேகமே இல்லாமல் அது நடிகர் மோகன்லால் தான் என சொல்லலாம். இந்த வருடத்தில் அவரது முதல் படமாக கடந்த ஜனவரியில் 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்த திரைப்படம் தோல்வியையே தழுவியது. அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் மோகன்லால் நடித்த வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தமே. அதே சமயம் அவரது கைவசம் தான் அதிக படங்களும் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் குறிப்பாக அவர் முதன் முதலாக இயக்கியுள்ள 'பரோஸ்' திரைப்படம் முதற்கொண்டு வரிசையாக அவரது ஐந்து படங்கள் வெளியாகும் தேதிகள் தற்போது மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல் ரிலீஸாக 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து மோகன்லால், ஷோபனா நடித்துள்ள 'தொடரும்' படம் ஜனவரி 30ம் தேதியும், பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' மார்ச் 27ம் தேதியும், சத்யன் அந்திகாடு டைரக்சனில் நடித்துவரும் 'ஹிருதயபூர்வம்' படம் ஆகஸ்ட் 28ம் தேதியும், தெலுங்கில் அவர் நடித்து வரும் 'விருஷபா' திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாக இருக்கின்றன.