பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

1989ல் தெலுங்கில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கிரிஜா. இந்தப் படம் தமிழில் 'இதயத்தை திருடாதே' என்கிற பெயரில் வெளியாகி இங்கேயும் வரவேற்பை பெற்றதுடன் நடிகர் நாகார்ஜுனாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தையும் பெற்று தந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கிரிஜாவின் துருதுருப்பான, துணிச்சலான, துள்ளாத நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்த இளம் பெண் கதாபாத்திரம் ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது. அந்த படத்தில் வரவேற்பை பெற்ற கிரிஜா அதே வருடத்தில் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'வந்தனம்' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். வந்தனம் படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த ஒன்று இரண்டு படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து மீண்டும் படிப்பதற்காக இங்கிலாந்து திரும்பி விட்டார் கிரிஜா. இடையில் 2003ல் ஹிந்தியில் வெளியான 'சனம் மேரி கசம்' படத்தில் சில நொடிகள் வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து மீண்டும் தென்னிந்திய சினிமாவிற்கு திரும்பியுள்ள நடிகை கிரிஜா கன்னடத்தில் உருவாகி வரும் 'இப்பணி தப்பிதா இலேயாளி' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது உருவ தோற்றமும் நிறையவே மாறி இருந்தாலும் முன் போலவே ரசிகர்களின் இதயத்தை தனது நடிப்பால் திருடுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.