பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலைசெய்த வழக்கில் கைதாகி 100 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்து 6 வாரங்கள் இடைக்கால ஜாமின் பெற்று வீடு திரும்பியுள்ளார் தர்ஷன்.
இந்தநிலையில் கன்னட தொலைக்காட்சி நடிகரும் தற்போது நடந்து கொண்டிருக்கும் கன்னட பிக் பாஸ் சீசன் 11ல் பங்கேற்று சமீபத்தில் எவிக்ட் ஆன போட்டியாளருமான வழக்கறிஞர் ஜெகதீஷ் என்பவர் தர்ஷன் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் ஜெகதீஷ் கூறும்போது, “நான் நடிகர் தர்ஷனை விமர்சித்து பேசியதற்காக அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்த நிலையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது தான் அதிலிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளேன். தர்ஷனின் ரசிகர்கள் மீண்டும் என்னை தாக்க முயற்சிக்கலாம். இதன் பின்னணிகள் தர்ஷன் தான் தூண்டுகோலாக இருந்து செயல்படுகிறார். அதனால் அவர்களிடம் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். கொலை மிரட்டல் விடுத்த தர்ஷன் ரசிகர்கள் மற்றும் அவரது பின்னணியில் இருக்கும் தர்ஷன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.