ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

நடிகர் பஹத் பாசிலின் படங்களுக்கு என மலையாள திரையுலகையும் தாண்டி தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் கேரளாவையும் தாண்டி தமிழகம் மற்றும் ஆந்திராவில் வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் பஹத் பாசில் இணைந்து வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. நிச்சயமாக ரஜினிகாந்த், பஹத் பாசில் காம்போ ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் பஹத் பாசில் ரசிகர்களுக்கு போனஸ் ஆக அக்டோபர் 17ம் தேதி மலையாளத்தில் அவர் நடித்துள்ள போகன் வில்லா என்கிற திரைப்படமும் ஒரு வார இடைவெளியில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் குஞ்சாக்கோ போபனும் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். அன்வர், பிக் பி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அமல் நீரத் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே பஹத் பாசிலை வைத்து இயோப்பிண்டே புத்தகம், வரதன் உள்ளிட்ட வெற்றி படங்களை அமல் நீரைத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




