அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாக சைதன்யா மற்றும் அவரது காதல் மனைவி நடிகை சமந்தா இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாகசைதன்யா காதலில் விழுந்துள்ளதாக பலமுறை பரபரப்பு செய்திகளில் அடிபட்டார். இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெகு விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற இருக்கிறது.
அதே சமயம் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடரான வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா ஜோடி 2027க்குள் பிரிந்து விடுவார்கள் என்றும் அதற்கும் ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் ஜோதிடம் கணித்துக் கூறியது சலசலப்பையையும் சர்ச்சையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெண்கள் உரிமை ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஜோதிடரின் மனைவியான வீணா என்பவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நாகசைதன்யா-சோபிதா ஜோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததற்காக நாகசைதன்யா தனக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை தர வேண்டும் என்று பகிரங்கமான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். தனது கணவரின் சர்ச்சை பேச்சை திசை திருப்பி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே இவர் இப்படி நாகசைதன்யாவுக்கு ஐஸ் வைக்கும் விதமாக பேசி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.