ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து தரைமட்டமான நிலையில் வீடு இழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகளை பெற்று வருகின்றனர். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் தங்களால் இயன்ற தொகையை பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்காக தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா', மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒன்றிணைந்து இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் விதமாக கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான நடிகர் சித்திக் அறிவித்துள்ளார். வரும் ஆக., 20ம் தேதி கேரளாவில் உள்ள அங்கமாலி நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது..
இது பற்றி அவர் கூறும்போது, “இந்த நிகழ்ச்சியை நாங்கள் வேறு ஒரு சமயத்தில் நடத்தலாம் என்று தீர்மானித்திருந்தோம். அதுமட்டுமல்ல இப்படி ஒரு பாதிப்பு நடக்கும் நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்துவது சரியல்ல என்றாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மழவில் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை அப்படியே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக வழங்க இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.