ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

இந்தியாவில் இயற்கை பேரிடர் நிகழும் போதெல்லாம் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் மொழி பாகுபாடு இன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீக்கி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்ட பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டம் ஆகின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களின் பங்களிப்பாக கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் லட்சங்களில் உதவிக்கரம் நீட்டிய நிலையில் தெலுங்கு திரையுலகில் இருந்து சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார்கள். இதை அடுத்து நடிகர் பிரபாஸ் தற்போது இரண்டு கோடி ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸிற்கு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அதிக ரசிகர்கள் இருப்பதும் இந்திய அளவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறிவிட்டதும் தான் இந்த அளவிற்கு அவர் தாராளமாக நிவாரண நிதி வழங்க காரணம் என்றும் சொல்லப்படுகிறது.