என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிப்பார். கடந்த ஆண்டு அவர் 'புலிமடா' என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் 'அஜயன்டே ரெண்டாம் மோஷனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். இவர்கள் தவிர பசில் ஜோசப், சுரபி லட்சுமி, ரோகினி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜித்தின் லால் இயக்குகிறார். மேஜிக் பிரேம் நிறுவனத்தின் சார்பில் லிஸ்பன் ஸ்டீபன் தயாரிக்கிறார். வருகிற செப்படம்பர் 12ம் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் படத்துக்கு எதிராக கொச்சி முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் படத்தை தயாரிக்க தன்னிடம் 3.20 கோடி கடன் பெற்றிருந்தாகவும் அதனை திருப்பித் தராமல் தயாரிப்பாளர் ஏமாற்றி விட்டதாகவும், தனது கடனை திருப்பி செலுத்தாதவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை தியேட்டர் மற்றும் ஓ டி டியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.