2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சின்னத்திரை நடிகை அப்சரா. 'சாந்த்வனம்' தொடர் மூலம் புகழ்பெற்ற அவர் மேலும் பல தொடர்களில் நடித்தார். மலையாள பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றார். தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கேரக்டர்களில் மிரட்டி வருகிறார். மலையாள சின்னத்திரை இயக்குனர் அலிபி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
இவரது தந்தை ரத்னாகர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணியில் இருக்கும்போது விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் வாரிசு அடிப்படையில் அப்சராவுக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நடிப்பை கைவிட்டு போலீஸ் வேலையில் சேர இருக்கிறார் அப்சார.
இதுகுறித்து அப்சரா கூறும்போது, “கலைத்துறையில் பயணிப்பதால் எனக்கு போலீஸ் துறையில் சேர விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் அரசு பணி என்பது நிரந்தர வேலை என்பதால் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர வற்புறுத்தி வருகிறார்கள். வேலையில் சேருவதற்கான அரசு ஆணையும் கிடைத்துவிட்டது. விரைவில் போலீஸ் துறையில் அலுவலக பணியில் சேர இருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது என்.சி.சி.யில் சேர்ந்து இருந்தேன். அப்போது ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் இருந்தது. கலைத்துறையில் கால் வைத்த பின்பு பழைய விருப்பங்களில் ஈடுபாடு குறைந்து விட்டது. ஆனாலும் நான் தற்போது சேர இருக்கும் புதிய பணியிலும் சாதிப்பேன். என்கிறார்.