ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

'தபாங் 3' ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் சாயி மஞ்ரேக்கர். அதன்பிறகு தெலுங்கு சினிமாவிற்கு வந்தார். கஹானி, மேஜர், ஸ்கந்தா படங்களில் நடித்தவர் தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கில் மீண்டும் நிகில் சித்தார்த்துடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்திற்கு 'தி இந்தியா ஹவுஸ்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இதனை நடிகர் ராம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிறது. ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார். அனுபம் கெர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு ஹம்பியில் உள்ள விருப்பாக்ஷா கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
படம் குறித்து இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா கூறும்போது “காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் 1905 ஆண்டு காலகட்டத்திய கதையை கொண்ட படம். புரட்சியின் உக்கிரமான உணர்வுடன் காதலையும் கலந்து தயாராகிறது” என்றார்.




