செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கடந்த சில நாட்களாகவே பின்னணி பாடகி சுசித்ராவின் பேட்டிகள் மூலமாக தமிழ் திரையுலகில் நடைபெற்று வரும் திரையுலக பிரபலங்களின் பார்ட்டி கலாச்சாரங்கள் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் இதே போன்று ஒரு பார்ட்டி நடைபெற்றது என்றும் அதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார் என்றும் செய்தி வெளியானது. போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலின்படி போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த பார்ட்டி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார் என்று சொல்லப்பட்டது.
தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வரும் ஸ்ரீகாந்த் தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தில் அவரது மூத்த சகோதரராக நடித்திருந்தார். தற்போது தேவரா, கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படி வெளியான செய்தி குறித்து மறுத்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.
“இது போன்ற ஒரு செய்தியை பார்த்து முதன்முதலாக நானும் என் குடும்பத்தாரும் வாய்விட்டு சிரித்தோம். இதோ நான் வீட்டின் முன்பாக தான் நின்று கொண்டிருக்கிறேன். எப்படி என் பெயரை பயன்படுத்தி இப்படி ஒரு செய்தி வெளியானது என்று தெரியவில்லை. செய்தி வெளியிடுவதற்கு முன் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு அதன்பின் வெளியிட்டு இருக்கலாம்.
ஒருவேளை அந்த பார்ட்டியில் பிடிபட்ட நபர் என்னை போன்ற சாயல் கொண்டவர் என்பதால் கூட இப்படி ஒரு செய்தி பரவ ஆரம்பித்ததோ என்னவோ ? என்றாலும் கூட அந்த நபர் தாடி வைத்திருக்கிறார். எனக்கு இது போன்ற பார்ட்டி கலாச்சாரம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனாலும் பல யு-டியூப் சேனல்களில் இந்தப் பார்ட்டியில் என்னை இணைத்து தவறான செய்திகள் வெளியாவதால் அதற்காகவே இந்த விளக்கத்தை அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.