குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் | மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை | 'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் | மணிரத்னம் பட வாய்ப்பு கைநழுவி போனது இப்படித்தான்: மலையாள நடிகர் விரக்தி |
நடிகர் ஜெயராம் கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஜெயராமின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் நானியின் ‛ஹாய் நானா' தெலுங்கு படத்தில் கூட ஜெயராம் நடித்திருந்தார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் மலையாளத்தில் ‛ஆப்ரஹாம் ஒஸ்லர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெயராம்.
இந்த படத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சீரியல் கொலைகளை கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயராம் நடிக்கிறார். இதுதவிர இந்த படத்தில் மம்முட்டியும் ஒரு முக்கியான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற அஞ்சாம் பாதிரா படத்தை இயக்கிய மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஜன.,11ம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் டிரைலரை நடிகர் மகேஷ்பாபு வரும் ஜனவரி 3ம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு வெளியிட இருக்கிறார். தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் குண்டூர் காரம் படத்தில் ஜெயராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் மகேஷ்பாபு ஜெயராம் படத்தின் டிரைலரை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.