ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

மலையான சினிமாவின் முக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. கடைசியாக மம்முட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்: படத்தை இயக்கினார். தற்போது அவர் மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்க, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, டேனிஷ் சைட், மனோஜ் மோசஸ், கதா நந்தி மற்றும் மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 25ம் தேதி திரைக்கு வருகிறது. மலையாளத்தில் தயாரானாலும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளளது. இதுகுறித்து இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூறும்போது "என்னைப் பொறுத்தவரை, ஒரு கருப்பொருளை திரைப்படமாக உருவாக்கும் செயல் முறையாக நடந்தது. ஒரு பெரிய வெற்றியை பிளாக்பஸ்டரை உருவாக்க வேண்டும் என்ற அழுத்தத்திலிருந்து இது உருவாகவில்லை, இது இயல்பாக நடந்த திரைப்படம்.
'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் அடிப்படை கரு, சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் முளைத்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவான கதைக்களமாக உருமாற்றம் பெற்றது. எழுத்தாளர் ரபீக் அந்த உலகத்தை என்னுடன் இணைந்து விரிவுபடுத்தினார். அதன் பிறகுதான் அந்த பாத்திரத்திற்கு மோகன்லால் சரியான பொருத்தமாக இருப்பார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்கிறார்




