காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுனில். இயக்குனர் ராஜமவுலி தான் இயக்கிய மரியாத ராமண்ணா என்கிற படத்தின் மூலம் அவரை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தினார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த படம் வெற்றி பெற்றாலும் அதன் பிறகு சுனில் கதாநாயகனாகவோ காமெடி நடிகராகவோ இரண்டையும் சரியாக தொடர முடியாமல் திணறினார். இந்த நிலையில் தற்போது சமீப காலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியுள்ளார் சுனில். புஷ்பா படத்தின் மூலம் இப்படி துவங்கிய அவரது பயணம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதைத் தொடர்ந்து தமிழிலும் ஜெயிலர், மார்க் ஆண்டனி, ஜப்பான், விரைவில் வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் எனத் தொடர்ந்து மிகப்பெரிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் 'டர்போ' என்கிற படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் சுனில். போக்கிரி ராஜா, புலி முருகன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்குகிறார். இவர்தான் நடிகர் ஜெகபதிபாபுவை மலையாள திரையுலகிற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.