நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
இந்த வருடத்தில் அதிக படங்கள் வெளியான நடிகை என்றால் அது நடிகை மஹிமா நம்பியாராகத்தான் இருக்கும். அந்த வகையில் கடந்த சில மாதங்களில் மட்டுமே மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ், தமிழில் சந்திரமுகி 2, கொலை, 800 உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த நடிகர் ஷேன் நிகமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மகிமா நம்பியார். இந்த ஜோடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது லிட்டில் ஹார்ட்ஸ் என்கிற படத்திலும் மீண்டும் இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தை ஆண்டோ ஜோஸ் பெரேரா மற்றும் அபி திரீஷா பால் என்கிற இருவரும் இணைந்து இயக்குகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.