மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! |
ஸ்லம் டாக் மில்லியனர் என்கிற படத்திற்காக சிறந்த சவுண்டு இன்ஜினியர் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றவர் மலையாள திரை உலகை சேர்ந்த ரசூல் பூக்குட்டி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி வரும் ரசூல் பூக்குட்டி கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தி சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ள ரசூல் பூக்குட்டி மலையாளத்தில் 'ஒட்ட' என்கிற படத்தை இயக்கி வந்தார்.. மேலும் இந்தப்படத்தை சில்ரன்ஸ் ரீயுனைடெட் எல்எல்பி என்கிற நிறுவனத்துடன் இணைந்து ரசூல் பூக்குட்டியே தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படத்தில் சத்யராஜ், ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க மலையாள திரை உலகை சேர்ந்த இளம் நடிகர்களான ஆசிப் அலி. இந்திரஜித் மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து வரும் அக்டோபர் 27ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.