பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

அஜித் நடித்த 'வீரம்' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் ஷியாஸ் கரீம். தற்போது மலையாள படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மலையாள 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதோடு எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி மையமும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் காசர்கோடு மாவட்டம் பெருன்னா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷியாஸ் கரீம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், 11 லட்சம் ரூபாயை பறித்ததாகவும் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஷியாஸ் கரீம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஷியாஸ் கரீம் துபாய்க்கு தப்பிச் சென்றார்.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷியாஸ் கரீம் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இந்த தகவல் அறிந்ததும் சுங்கத் துறையினர் அவரைப் பிடித்து சந்தேரா போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சந்தேரா போலீசார் சென்னை வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.




