ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படம் மலைக்கோட்டை வாலிபன். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெரடி, மணிகண்டன் ஆச்சாரி, ராஜீவ் பிள்ளை உள்பட பலர் நடிக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார், பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கிறார்.
படத்தின் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக மோகன்லால் அறிவித்துள்ளார். இக்குனர் லியோ ஜோசின் பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டார்.
'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் புதுச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது. மேக்ஸ் லேப், செஞ்சுரி பிலிம்ஸ், சரிகம இந்தியா லிமிடெட் மற்றும் ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.