ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் மோகன்லால், தனது நீண்டநாள் கனவான டைரக்சன் ஆசையையும் நிறைவேற்றும் விதமாக தற்போது பாரோஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் 3-டி யில் உருவாகி வரும் இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்துவைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் பணிகளை கவனிப்பதற்காகவே அதிக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனம் செலுத்தி வருகிறார் மோகன்லால்.
இந்த நிலையில் இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழுவினர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி படத்தொகுப்பின்போது அதிலிருந்து வெட்டி நீக்கப்பட்ட காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக ஒரு படம் வெளியானபிறகு அதிலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் என வெளியிடப்படுவது தான் வழக்கம். ஆனால் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இப்படி நீக்கப்பட்ட காட்சியை மோகன்லால் படக்குழுவினர் வெளியிட்டு இருப்பது ஆச்சரியம்தான்..