காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
மலையாள நடிகர் நிவின்பாலி பிரேமம் படம் மூலமாக மலையாளம் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து தற்போது நேரடியாக தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை என்கிற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதேசமயம் மலையாளத்தில் கடந்த சில வருடங்களாகவே நிவின்பாலி நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஹனீப் அதேனி என்பவர் டைரக்சனில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தற்போது ராமச்சந்திரா பாஸ் அன் கோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மம்முட்டி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான தி கிரேட் பாதர் படத்தை இயக்கியதுடன் மம்முட்டி நடித்த ஆப்ரஹாமின்டே சந்ததிகள் என்கிற வெற்றி படத்திற்கு கதையையும் எழுதியவர் தான் இந்த ஹனீப் அதேனி என்பது குறிப்பிடத்தக்கது.