'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

தெலுங்கில் கடந்த வெள்ளி அன்று ரங்கபாலி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகனாக நாக சவுர்யா நடித்தார். இவர் தமிழில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான தியா என்ற படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்தவர். கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்கள் எதுவும் இவருக்கு அமையாத நிலையில் இந்த ரங்கபாலி திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ராசி இல்லாதவர்கள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கும் என திடமாக நம்பினார். ரிலீசுக்கு முன்பு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட உறுதியாக அதை கூறி வந்தார் நாக சவுர்யா..
இந்த நிலையில் படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற தவறியதுடன் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது. ஆனாலும் படக்குழுவினர் இந்த படம் வெற்றி என்று சக்சஸ் மீட்டை நடத்தினார்கள். அந்த நிகழ்வின்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நாக சவுர்யாவிடம், படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து ஒரு கேள்வியை கேட்டு விளக்கம் பெற முயற்சித்தார். அப்போது ஹீரோவுக்கு பதிலாக படத்தின் இயக்குனர் பவன் பசம் ஷெட்டி விளக்கம் கொடுக்க முயன்றார்.
ஆனாலும் திருப்தி அடையாத அந்த பத்திரிக்கையாளர் நாக சவுர்யாவிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்க, கோபத்தை அடக்கியபடி அதற்கு பதில் சொன்ன நாக சவுர்யா, அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பிப்பதற்கு உள்ளாகவே படக்கென கும்பிடு போட்டுவிட்டு எழுந்து வெளியேறினார். இவரது இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினரிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..