23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகின் மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனுமான நரேஷ் என்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி முறையாக தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் நரேஷ் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என வழக்கு தொடர்ந்து பரபரப்பை கூட்டினார். அந்த சமயத்தில் நரேஷ், பவித்ரா, லோகேஷ் இருவரும் இணைந்து நடித்த மல்லி பெல்லி திரைப்படம் வெளியானது. இந்த படம் அவர்களது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருந்தது.
படம் ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் கூட இந்த திருமண சர்ச்சை காரணமாக இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானபோது ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்து உள்ளதாக கூறி இந்த படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி தற்போது ஓடிடி தளத்தில் இருந்து மல்லி பெல்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.