அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட சிலர் வதந்திகளை உண்மைகள் போல பரப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்னதாக இவர்களே அவர்கள் இறந்து விட்டதாக தகவலை பரப்புவார்கள். உயிருடன் திடகாத்திரமாக இருக்கும் நபர்களுக்கு கூட அடிக்கடி இது நடக்கும். அந்த வகையில் பிரபல மலையாள டிவி நடிகரான டி.எஸ் ராஜு என்பவர் இறந்து விட்டதாக சமீபத்தில் சோசியல் மீடியாவில் வதந்தி ஒன்று உண்மை செய்தி போல பரவியது.
மலையாளத்தில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் அஜு வர்கீஸ் இதை உண்மை என்று நம்பி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். பின்னர் தான் இது வதந்தி என தெரிய வந்ததும் உடனே அதை டெலீட் செய்துவிட்ட அஜு வர்கீஸ் சம்பந்தப்பட்ட நடிகரிடம் சோசியல் மீடியா மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது வருத்தங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குறிப்பாக மீடியாக்கள் முன்பாகவே நடிகர் டி.எஸ் ராஜுவுக்கு போன் செய்த அஜு வர்கீஸ் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
சோசியல் மீடியாவில் வெளியான அவரது இறப்பு செய்தி அந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது போன்று இருந்ததால் அதை உண்மை என நம்பிவிட்டேன் என்றும் கூறியுள்ளார் அஜு வர்கீஸ். இந்த வதந்தி குறித்து நடிகர் டி.எஸ் ராஜு கூறும்போது நான் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.. நான் சாகவேண்டும் என விரும்பும் யாரோ ஒரு நபர் முன்கூட்டியே எனக்கு ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளதாக இதை நினைக்கிறேன்” என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.