விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
மோகன்லால் நடிப்பில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அடுத்தடுத்த இரண்டு படங்கள் மலைக்கோட்டை வாலிபன் மற்றும் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எல் 2 ; எம்பிரான் ஆகியவை தான். இதில் எம்பிரான் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. மலைக்கோட்டை வாலிபன் படப்பிடிப்பு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது. மல்யுத்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மலையாளத்தில் வித்தியாசமான கதைக்களங்களில் படங்களை இயக்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரராக நடிக்கிறார் என்பதுடன் இரு வேடங்களில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஹரீஷ் பெராடி படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுக்கு சால்வை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் குறித்து மோகன்லால் கூறும்போது, “மலைக்கோட்டை வாலிபன் படம் தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடுமா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இதுவரை மலையாள திரை உலகில் செய்யாத ஒரு புதிய முயற்சியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம் என்று மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்” என்று கூறியுள்ளார்.