ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக நடிக்கும் அவரது 30வது படத்தை கொரட்டாலா சிவா இயக்கி வருகிறார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். ஜூனியர் என்டிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்கு தேவரா என டைட்டில் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த டைட்டில் வெளியான கொஞ்ச நேரத்திலேயே தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பந்த்லா கணேஷ் என்பவர் இந்த டைட்டில் என்னுடையது என்று கூறி முதல் சர்ச்சையை கிளப்பி வைத்துள்ளார்.
”இந்த டைட்டிலை நான் தான் முதலில் பதிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் அதை மறந்து விட்டேன். இப்போது அவர்கள் அதை தூக்கி விட்டனர்” என்று ஒரு ட்வீட் மூலம் இதை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடித்த பாட்ஷா மற்றும் டெம்பர் ஆகிய படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இவரது டுவீட்டிலிருந்து இவர் தேவரா என்கிற டைட்டிலை புதுப்பிக்க தவறிவிட்டார் என்பதும் தனது ஆதங்கத்தையே வெளிப்படுத்தி உள்ளார் என்றும் தெரிகிறது.