விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாளத்தில் சுதிப்தோ சென் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரள ஸ்டோரி என்கிற திரைப்படம் கடந்த சில நாட்களாகவே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் உள்ள அப்பாவி இந்து பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு பாலியல் தொழிலாளிகளாக அனுப்பி வைக்கப்படுவதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தில் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் இந்த வலையில் சிக்கி உள்ளனர் என்றும் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
அதே சமயம் இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் படத்தில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 10 காட்சிகளை நீக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர். அதே சமயம் கேரளாவில் இந்த படத்தை திரையிட எழுந்துள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்திளும் அதே போன்று எதிர்ப்பு எழுந்துள்ளதால் இந்த படம் தமிழகத்தில் திரையிடப்படமா என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.