ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
பிரபல தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'தீ' என்கிற டான்ஸ் ஷோ மூலம் நடன இயக்குநராக பிரபலமானவர் சைதன்யா. இவர் நடன நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். தனிப்பட்ட நடன ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் கிளப் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெரும் கடன் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்பு அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் "எனது பெற்றோர், சகோதரி, சக டான்ஸ் மாஸ்டர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை மன்னிக்க வேண்டும். பணப்பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுக்கிறேன். இதனை சமாளிக்க எவ்வளவோ முயன்றும் பலனில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். சைதன்யாவின் மரணத்திற்கு, தெலுங்கு திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.