கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
வளர்ந்து வந்த இளம் கன்னட நடிகர் சம்பத் ஜெயராம். 'அக்னிசாக்ஷி' என்ற கன்னட தொடரின் மூலம் பிரபலமான இவர் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருந்தார். கடந்த ஆண்டுதான் திருமணம் செய்தார். ஜெயராம் நடித்த பல படங்கள் வெளிவராமல் தேங்கி கிடந்துள்ளது. சீரியல் வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயராம் பெங்களூர் நெலமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 32 வயதான சம்பத் ஜெயராமின் மரணம் கன்னட சின்னத்திரை, பெரியதிரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பத் ஜெயராமின் மறைவு குறித்து நடிகர் ராஜேஷ் துருவா தனது டுவிட்டரில் “உனது பிரிவை தாங்கும் சக்தி இல்லை. நிறைய படங்கள் தயாராகி நிலுவையில் உள்ளன. உனது கனவை நிறைவேற்ற இன்னும் காலம் இருக்கிறது. திரும்பி வா'' என்று குறிப்பிட்டு உள்ளார்.