ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த 2018ல் வெளியான ஜோசப் என்கிற படத்தில் கதையின் நாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் இரு வேடங்களில் நடித்திருந்த இரட்ட என்கிற திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது ஒரு புதிய தெலுங்கு படம் ஒன்றில் மிகவும் கொடூரமான வில்லனாக நடிப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளார் ஜோஜூ ஜார்ஜ்.
வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் கதையை எழுதும்போது அதில் இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ஜோஜூ ஜார்ஜை மனதில் வைத்து தான் எழுதினாராம் ஸ்ரீகாந்த் ரெட்டி. ஆனால் ஜோஜூ ஜார்ஜுக்கு போன் செய்து இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியபோது தெலுங்கில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம் ஜோஜூ ஜார்ஜ்.
“ஆனால் நான் அவரை மனதில் வைத்து இந்த கதாபாத்திரத்தை எழுதியதால் உடனே கிளம்பி கேரளாவில் உள்ள அவரது வீட்டிற்கு நேரிலேயே சென்று விட்டேன். அப்போதும் அதே மனநிலையில் இருந்தவரிடம், இந்த படத்தின் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் கூறியதும் அதில் ரொம்பவே ஈர்க்கப்பட்டு உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும் தெலங்கானா பாஷையை கூட டப்பிங்கில் தானே பேசுவதாக கூறும் அளவிற்கு அவரை இந்த கதாபாத்திரம் ஈர்த்துவிட்டது. ஒரு முரட்டுத்தனமான இந்த கதாபாத்திரம் படத்தின் ஹீரோ வைஷ்ணவ் தேஜ் மோதும் காட்சிகள் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ரசிகர்களை கவரும்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஸ்ரீகாந்த் ரெட்டி.