நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா | ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அபிஷன் ஜீவிந்த் | காமெடி நடிகராக மாறிய திரிஷ்யம் வில்லன் நடிகர் | வில்லன் நடிகருக்கு ஊக்கமளித்து பதிவிட்ட அவரது பள்ளி ஆசிரியை | 'முத்த மழை' வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை | நானியின் ‛தி பாரடைஸ்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? | நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் |
மலையாள திரையுலகில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ஸ்படிகம். கல்ட் கிளாசிக் வகையைச் சேர்ந்த இந்த படத்திற்கு எப்போதுமே கேரள ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. பத்ரன் இயக்கிய இந்த படத்தில் ஆடுதோமா என்கிற ஒரு அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். தற்போது இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு 4 கே முறையில் கடந்த பிப்-9ஆம் தேதி வெளியானது. கேரள விநியோகஸ்தர் சங்கமே ஆச்சரியப்படும் வகையில் முதல் நாளன்று கேரளாவில் மட்டும் 77 லட்சம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு கடந்த சில நாட்கள் முன்னதாக ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான அலோன் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் கேரள அளவில் முதல் நாளில் வெறும் 75 லட்சம் மட்டுமே வசூலித்து தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் ஸ்படிகம் திரைப்படம் அலோன் படத்தை விட அதிகம் வசூலித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல, இதே தேதியில் மம்முட்டி நடித்த கிறிஸ்டோபர் திரைப்படமும் வெளியாகி உள்ளது. மம்முட்டி படம் போட்டியாக வெளியாகி இருக்காவிட்டால் ஸ்படிகம் திரைப்படம் இன்னும் அதிக வசூலை ஈட்டி இருக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் வியப்புடன் கூறி வருகிறார்கள்.