சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் |
கன்னட சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் விஷ்ணுவர்தன். 2009ம் ஆண்டு தனது 59வது வயதில் மரணம் அடைந்தார். மத்திய அரசு அவருக்கு 2013ம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. மாநில அரசு விஷ்ணுவர்த்தனுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தது.
அதன்படி மைசூரு அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஹலாலு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. அவரது நினைவு தினமான நேற்று, இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். விஷ்ணுவர்தனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான பாரதி, மகள் கீர்த்தி, மருமகன் அனிருத், மைசூர் எம்பி பிரதாப் சிங் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பொம்மை, "விஷ்ணுவர்தன் ஒரு மதிப்புமிகு நடிகர். பல மொழிகளில் நடித்துள்ள பல மொழி நடிகர். சாகச சிங்கம் என்று அழைக்கப்படுபவர் . விஷ்ணுவர்தன் நினைவிடம் சுற்றுலா தலமாக மாற வேண்டும்" என்றார்.