அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

தெலுங்குத் திரையுலகத்தில் இதற்கு முன்பு ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு படங்கள் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்ததில்லை. அந்த சாதனையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இந்த பொங்கலுக்கு படைத்தது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் பாலகிருஷ்ணா நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' படம் ஜனவரி 12ம் தேதியும், சிரஞ்சீவி நடித்த 'வால்டர் வீரய்யா' படம் ஜனவரி 13ம் தேதியும் உலகம் முழுவதும் வெளியானது.
இரண்டு படங்களுமே 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 'வால்டர் வீரய்யா' படம் 108 கோடி வசூலையும், 'வீரசிம்ஹா ரெட்டி' படம் 104 கோடி வசூலையும் பெற்றதாக நேற்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இரண்டு படங்களுமே தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பமாகியுள்ளதாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.




