மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குனர் அமல் நீரத். அதைத்தொடர்ந்து பிரித்விராஜ் நடித்த அன்வர், சமீபத்தில் மீண்டும் மம்முட்டியின் நடிப்பில் வெளியான பீஷ்ம பர்வம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாக கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரமட்டம் பகுதியில் உள்ள கே ஆர் நாராயணன் தேசிய காட்சி அறிவியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியின் டைரக்டர் ஆன சங்கர் மோகன் என்பவரை மாற்றக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த மாணவர்களுக்கு ஆர்ட் ஆப் புரொடெஸ்ட் என்கிற தலைப்பில் வகுப்பு எடுப்பதற்காக இயக்குனர் அமல் நீரத் கல்லூரிக்கு வந்தார். ஆனால் அவரை போலீசாரும் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த பாதுகாவலர்களும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதை தொடர்ந்து கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு அரங்கு ஒன்றில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தினார் அமல் நீரத். மேலும் மாணவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்து விட்டு சென்றார். மலையாள சினிமாவில் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட சங்கர் மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில் இயக்குனர் அமல் நீரத் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.