ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன். தொடர்ந்து மோகன்லாலை வைத்து படங்களை இயக்கி வந்த இவர், கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மம்முட்டியை வைத்து கிறிஸ்டோபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அமலாபால், ஐஸ்வர்ய லட்சுமி, சினேகா என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இது தவிர முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நடிக்கிறார். படத்தின் வில்லனாக நடிகர் வினய் ராய் நடித்துள்ளார். துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன், டாக்டர் ஆகிய படங்களை தொடர்ந்து மலையாளத்திலும் ஹைடெக் வில்லனாகவே முதன்முறையாக அறிமுகமாகிறார் வினய் ராய்.
தற்போது இவருடைய கதாபாத்திரம் குறித்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் படக்குழுவினர் அதில். வினய் பெயரை குறிப்பிடாமல் அவருடைய முகத்தோற்றம் சரியாக தெரியாத அளவிலும், முதுகுப்பக்கம் மட்டும் தெரியுமாறும் இந்த போஸ்டர்களை வெளியிட்டு அதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருந்தனர். ஆனால் இந்த போஸ்டர்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட மம்முட்டி, சீதாராம் திருமூர்த்தி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் வினய் நடிக்கிறார் என்ற தகவலை குறிப்பிட்டு படக்குழுவினர் வைத்த சஸ்பென்ஸை தெரியாமல் உடைத்துவிட்டார்.




